செய்திகள்

கிரிக்கெட் வீராங்கனை கமலினி, ‘கோகோ’ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, பிப் 10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கு. கமலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார். மேலும், புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் வி.சுப்ரமணிக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 […]

Loading

செய்திகள்

அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை, பிப். 10– தமிழக பட்ஜெட் தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் 2025–2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து, கருத்துகளைப் பெற்றுள்ளனர். அந்தக் கருத்துகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் […]

Loading

செய்திகள்

56-வது நினைவு நாள்: அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை, பிப். 3- மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினரின் அமைதி பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப் பேரணியில் தி.மு.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை,பிப்.2– “2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கில் வெல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன். […]

Loading

செய்திகள்

திண்டிவனத்தில் 1 கிமீ நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திண்டிவனம், ஜன.28-– திண்டிவனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார். மாவட்ட எல்லையான ஓங்கூரில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு திண்டிவனத்துக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். திண்டிவனம்- சென்னை தேசிய […]

Loading

செய்திகள்

மக்களும் தமிழக அரசும் கடுமையாக எதிர்த்து டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தது மாபெரும் வெற்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மதுரை, ஜன.27- டங்ஸ்டன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது சாதாரண வெற்றியல்ல, மாபெரும் வெற்றி என்று 2 கிராமங்களில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப் பட்டால், சுமார் 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என […]

Loading

செய்திகள்

‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11 ஆயிரம் பேர் மீதான வழக்குகள் ரத்து

மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை சென்னை, ஜன.27- மதுரையில் ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை போலீசார் ரத்து செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ‘டங்ஸ்டன்’ சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாப்பட்டி உள்பட சுற்றி உள்ள 11 கிராம மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கடந்த 7-ந் […]

Loading

செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை, ஜன. 23– பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் […]

Loading

செய்திகள்

யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற 9 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜன.21-– யு.ஜி.சி.யின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 9 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து எனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறேன். வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள், மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. […]

Loading

செய்திகள்

அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் தமிழக கவர்னர்

பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு சென்னை, ஜன.21-– தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் என்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசினார். பீகார் மாநிலம் பாட்னாவில் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு, அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-– இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் […]

Loading