செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் முழு ஊரடங்கு: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி, மே 4– கொரோனாவை கட்டுப்படுத்த, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்திவிட்டு, முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த கொரோனா பாதிப்பு 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் […]

செய்திகள்

பீகாரில் மே 15 வரை முழு ஊரடங்கு அமுல்

பாட்னா, மே.4 பீகாரில் வரும் மே 15ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் லாக்டவுன் என்று அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐகோர்ட் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரும் என்று சொல்லப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சக அமைச்சர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவிப்பை வெளியிட்டார். ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி […]

செய்திகள்

நாடெங்கும் தொற்று அதிகமுள்ள 150 மாவட்டங்களில் ஊரடங்கா?

டெல்லி, ஏப். 29– நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில், மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வெகு வேகமாகப் பரவி உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், புது டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் […]

Uncategorized

முழு ஊரடங்கிலும் இயங்கிய அம்மா உணவகங்கள்

வழக்கத்தைவிட 40% அதிகமானோருக்கு உணவு சென்னை, ஏப்.26- முழு நேர பொது ஊரடங்கு நாளான நேற்று அம்மா உணவகங்களில் வழக்கத்தை விட 40% பேர் கூடுதலாக உணவருந்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு நகரமே வெறிச்சோடி கிடந்தன. சாலையோர உணவகங்கள், டீ கடைகள், பெட்டிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், திறந்தக்கப்பட்டிருந்த சில ஹோட்டல்களிலும் தனியார் உணவு நிறுவன செயலி மூலம் […]

செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்

சென்னை, ஏப்.26– அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதைக்கட்டுக்குள் கொண்டுவர கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நேற்று அமுலுக்கு வந்தன. மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. […]

செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது ஒரு நாள் முழு ஊரடங்கு

சென்னை, ஏப். 25- தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு […]

செய்திகள்

அம்மா உணவகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும்

சென்னை, ஏப்.24– சென்னையில் அம்மா உணவகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் நாளை நடைபெறும் ஊரடங்கின் போது வழக்கத்தை விட அதிகமானோர் சாப்பிட வருவார்கள் என்பதால் கூடுதலாக உணவு தயாரிக்க மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறது. ஆதரவற்றவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கூட அம்மா உணவகங்களில் பாத்திரங்களை கொண்டு சென்று […]

செய்திகள்

நாளை முழு ஊரடங்கு: மெட்ரோ ரெயில்` ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கம்

சென்னை, ஏப். 24– நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும், மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று படுவேகமாக பரவி வருவதையடுத்து, வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள்கிழமை […]

செய்திகள்

முழு ஊரடங்கு நாட்களில் கோவில்களில் திருமணம் நடத்தலாம்: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை, ஏப்.21– முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற (25-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும். இந்த நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் […]

செய்திகள்

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கில் 2 மணி நேரத்திற்கு ஒரு ரெயில் இயக்கம்

சென்னை, ஏப்.21– ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்குளில் அத்யாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், முன்கள பணியாளர்கள் பயனம் செய்ய 2 மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று(செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு […]