வாழ்வியல்

செரிமானத்தைச் சீராக்கும் முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்துக்களும் தண்ணீரும் உள்ளன. நார்ச்சத்து மற்றும் தண்ணீர் இவை இரண்டும் குடல் அசைவுகளுக்கு உதவுவதால் மலச்சிக்கலை தடுக்க உதவும் . மேலும் வெள்ளை முள்ளங்கி உங்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராட உதவும். முள்ளங்கி பூஞ்சை எதிர்ப்பு குணத்தை கொண்டுள்ளது. மற்ற முள்ளங்கிகளைப் போலவே வெள்ளை முள்ளங்கி ஒரு இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு காய்கறியாகும். இது பெண்ணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் வாய்வழி ஈஸ்ட் தொற்றுகள் போன்றவற்றை […]

வாழ்வியல்

காய்ச்சல், உடல் வீக்கம், தொண்டை வலியைக் குணமாக்கும் முள்ளங்கி

முள்ளங்கி அல்லது ரேடிஸ் (Radish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சார்ந்தவை. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இவை அதிகமாக பயிரிடப்படுகின்றன. முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கி, சிகப்பு முள்ளங்கி போன்ற பல பல வகைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக, வெள்ளை முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து முள்ளங்கிகளும் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன. காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாக வெள்ளை முள்ளங்கி விளங்குகிறது. இவை ஆயுர்வேதத்திலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த […]

வாழ்வியல்

புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வெள்ளை முள்ளங்கியில் பாலிபினால்கள் போன்ற பினோலிக் சேர்மங்கள் நிறைய உள்ளன. இந்த சேர்மங்கள் கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. இந்த சேர்மங்கள் முள்ளங்கியின் தோல் மட்டும் வேரில் அதிகமாக உள்ளதால் அவற்றை தோலுடன் உண்பது நல்லது.

வாழ்வியல்

சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கி குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் 3 வகைகள் உள்ளன. அவை 1. வெள்ளை முள்ளங்கி 2. சிவப்பு முள்ளங்கி 3. மஞ்சள் முள்ளங்கி ஆகியவைகள் ஆகும். முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன. இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது. இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பத்தையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும். வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும் மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் […]