சென்னை, ஜூலை 6– சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை எதிரொலியாக ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக (லீக்) குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியானது. பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. 1500-க்கும் […]