135 பயணிகள் பத்திரமாக மீட்பு மும்பை, ஆக. 22– நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 எனும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 135 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக […]