சென்னை, செப்.19-– ‘குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கினார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-–25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யும்போது; “குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க ‘புதிய ஓய்வூதிய திட்டம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்தபடி, என்.பி.எஸ். வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தை காணொலி காட்சி […]