வேலூர், பிப்.17– தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்து சொல்வோம். மீண்டும் எடப்பாடி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என்று வேலூரில் நடந்த இளைஞர் பாசறை மண்டல மாநாட்டில் சூளுரைக்கப்பட்டது. வேலூரில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.வி.பி. பரமசிவம் தலைமையில் நடந்தது. மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு வரவேற்றார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– போதைப்பொருள் பயன்பாடுகளும், கள்ளச்சாராயம் மரணங்களும், பெண் குழந்தைகளுக்கு […]