வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் வழங்கினார் சென்னை, டிச.9– தி.மு.க.வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரிடம் திருமாவளவன் அளித்தார். முன்னதாக வி.சி.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும், எம்.பி.க்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.