சென்னை, செப்.26- தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து பணியாற்றி வருகிறார். உள்நாட்டு தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கடந்த மாதம் கூட அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். […]