விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவு விழுப்புரம், ஜூன்.7- பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் நீதி கிடைக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பூர்ணிமா […]