அந்தப் பிரதான ஓட்டலில் எப்போதும் நெருக்கடியாகவே இருக்கும். அசைவ உணவு வகைகளில் சிறந்து விளங்கும் அந்த ஓட்டலில் அசைவ உணவிற்கென்றே சிறப்பான மரியாதை இருக்கும். அந்த ஓட்டலில் சாப்பிட்டால் தொண்டைக்கும் நாவுக்குமான சுவை உருண்டு கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் ஓட்டலில் இருந்து அசைவ உணவின் வாசம் நம்ம கூடவே வரும் அந்த அளவிற்கு நம்மை அப்பிக் கொண்ட சுவை நம்மை அகன்று விடாது நிற்கும். அப்படிப்பட்ட அசைவ உணவகத்திற்குள் சுதாகர் குடும்பம் நுழைந்தது. […]