செய்திகள்

ஓட்டு போட செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊபர் நிறுவனம் தரும் இலவச சவாரி

சென்னை, ஏப்.5-– சென்னை, கோவை, திருச்சியில் வாக்களிக்க செல்லும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதியை இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஊபர் நிறுவனம் வழங்குகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-– தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயகக் கடமையை செயல்படுவத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் (80 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து அவர்கள் […]

செய்திகள்

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம், மார்ச் 27–- காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2101 பேர் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 28, 30 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே இக்குழுக்கள் சென்று அஞ்சல் […]

செய்திகள்

முதியவர்கள் தபால் ஓட்டு அளிக்க ஏதுவாக ‘12–டி’ படிவம்

சென்னையில் வீடுகளுக்கு சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வழங்கினார் சென்னை, மார்ச்.6– முதியவர்கள் தபால் ஓட்டு அளிக்க ஏதுவாக ‘12–டி’ படிவம் வழங்கும் பணியை சென்னையில் வீடுகளுக்கு சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் வழங்கி துவக்கி வைத்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும், கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு அளிக்கலாம் என […]

செய்திகள்

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பங்கேற்பு கடலூர், மார்ச் 4– மாற்றுதிறனாளிகள் 100% வாக்களிப்பது தொடர்பாக சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக செவித்திறன் தினம் கடைபிடிப்பதை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர மோட்டார் […]