கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். தற்போதைய சூழலில் மார்பக புற்றுநோய் பெண்களிடம் மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு நோயாக உள்ளது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்காது. அதை வலியுறுத்தி கங்கா மருத்துவமனை சார்பில் […]