சென்னை, ஜூன்.24-– அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் கழிவு மேலாண்மையில் இருந்து வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மையை மேம்படுத்து வதற்காக ஏற்படுத்தப்பட்ட தூய்மை இயக்கத்தின் ஆட்சிக் குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த இயக்கத்தை செயல்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழுவின் முதல் […]