செய்திகள்

தூய்மைக்கான தரவரிசை கணக்கெடுப்பு: பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

சென்னை, ஜன.13– மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மைக்கான மதிப்பீடு – 2021 தரவரிசை கணக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைஅமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் நகர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள நகர உள்ளாட்சி […]

செய்திகள்

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், தனிநபர்களிடமிருந்து ரூ.3.48 கோடிஅபராதம் வசூல்

சென்னை, ஜன.12– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.3.48 கோடி அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் ஆலோசனை மற்றும் உத்தரவுகளின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் தொழில், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடிகள் இயங்க பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். தளர்வுகளுடன் […]

செய்திகள்

மெரினா கடற்கரையில் 900 ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு: ஐகோர்ட் நீதிபதி முன்னிலையில் 20, 21ந் தேதியில் குலுக்கலில் தேர்வு

சென்னை, ஜன. 8– சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியபடி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட உள்ளது. ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி, நீதிபதி முன்னிலையில் இம்மாதம் 20, 21ந் தேதியில் குலுக்கல் முறையில் 900 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் ஏற்கனவே, வியாபாரம் நடத்தி சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்களை வகை “அ” என்ற அடிப்படையில், 900 கடைகளில் 60 […]

செய்திகள்

சென்னை நகரில் 73 தெருக்களில் 32 கி.மீ நீள மழைநீர் வடிகால் பணிகள் துவக்க நடவடிக்கை

சென்னை, டிச. 25 சென்னை நகரில் 73 தெருக்களில் 32 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

செய்திகள்

26 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு: அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார் இன்று முதல் 13–ந்தேதி 8 நாள் வரை வழங்கப்படுகிறது சென்னை, டிச.6- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை இன்று அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்து பொதுமக்களுடன் உணவருந்தினர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

செய்திகள்

பெயர் சேர்க்கை, திருத்தத்தில் ஆட்சேபம் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலரை அணுகலாம்

பெயர் சேர்க்கை, திருத்தத்தில் ஆட்சேபம் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலரை அணுகலாம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தகவல் சென்னை, நவ.29 சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலரை அணுகுமாறு தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய […]

செய்திகள்

22 சுரங்கப்பாதைகளிலும் தேக்கம் இன்றி நீர் அகற்றம்: சென்னை கமிஷனர் பேட்டி

52 இடங்களில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன 22 சுரங்கப்பாதைகளிலும் தேக்கம் இன்றி நீர் அகற்றம்: சென்னை கமிஷனர் பேட்டி சென்னை, நவ.26– பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்களிலும் மழையின் காரணமாக 52 இடங்களில் விழுந்த மரம் மற்றும் மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு […]

செய்திகள்

சென்னையில் 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 39 லட்சத்து 40 ஆயிரம்

* வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள் – 3,06,189 * துறைமுகத்தில் குறைந்த வாக்காளர்கள் – 1,73,481 சென்னையில் 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 39 லட்சத்து 40 ஆயிரம் சென்னை, நவ.16– சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய […]

செய்திகள்

சென்னையில் 30 கால்வாய்கள் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பாதுகாப்பான இடங்களில் குடியேற்றம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னையில் 30 கால்வாய்கள் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பாதுகாப்பான  இடங்களில் குடியேற்றம் கமிஷனர் பிரகாஷ் தகவல் சென்னை, அக்.3– முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மண்டல கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் […]

செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்காக வார்டுக்கு 5 என்ஜினீயர்கள் நியமனம்

சென்னையில் பாதிப்பு ஏற்படும் 18 இடங்கள் வடகிழக்கு பருவமழைக்காக வார்டுக்கு 5 என்ஜினீயர்கள் நியமனம் கமிஷனர் பிரகாஷ் பேட்டி சென்னை, அக்.31- சென்னையில் வடகிழக்கு பருவமழை பணிகளை கண்காணிக்க வார்டுக்கு 5 என்ஜினீயர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ரிப்பன் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் […]