செய்திகள்

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.16- வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார். வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைப்பது ஸ்டாலின் திட்டம்

நாடும் நடப்பும் – ஆர் முத்துக்குமார் மக்களின் கேள்விகளுக்கு “உங்களில் ஒருவன்” நிகழ்ச்சியின் வாயிலாக பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் அணுகுமுறையையும் நிதி ஒதுக்கீட்டின் குறைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைவாகவே உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் பெயரையே கூட ஒன்றிய பட்ஜெட்டில் நினைவுபடுத்தவில்லை. அது ஏன்? என கேள்வி எழுப்பினார். தமிழக மாணவர்களின் கல்வி உதவித்தொகைகளுக்கான நிதியைக் கூட நிறுத்தியுள்ள […]

Loading

செய்திகள்

தேர்வு பயம்: டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

புதுடெல்லி, டிச. 22– டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் […]

Loading

செய்திகள்

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பு

திட்டக்குழு ஆய்வில் தாக்கல் சென்னை, டிச.17– “முதலமைச்சரின் காலை உணவு” திட்டத்தினால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு, “புதுமைப்பெண்” திட்டத்தால் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6%, விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3% கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, ”புதுமைப்பெண் திட்டம்” “எண்ணும் எழுத்தும் திட்டம்” முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. மாநிலத் திட்டக் குழுவின் மூலம் […]

Loading

செய்திகள்

வெறுப்புணர்ச்சி காரணமாக கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

ஒட்டாவா, டிச. 16– கனடாவில் ஒரே வாரத்தில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு உணர்ச்சி காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு […]

Loading

செய்திகள்

வங்கதேச அதிபர் பதவி விலக கோரி மீண்டும் மாணவர்கள் போராட்டம்

டாக்கா, அக். 23– வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய அதிபருக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Loading