செய்திகள்

வெற்றி ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்1 தேர்வில் சாதனை

சென்னை, மே 10–- வெற்றி ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் சப் கலெக்டர் மற்றும் டிஎஸ்பி பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அகாடமியின் இயக்குனர் சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:– தமிழ்நாடு தேர்வு கழகம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 90 மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணி நியமனம் செய்து ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி ஐ.ஏ.எஸ். கல்வி மையத்தில் படித்த 59 […]

Loading

செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு சென்னை, மே 9– பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் வீரராகவ கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர், மே 6– திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர் வந்துள்ளனர். இதையடுத்து வீரராகவ கோயில் குளத்தில் இன்று காலை 6 மணியளவில் சந்தியாவதனம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

கடும் சோதனைக்குப் பின் நீட் தேர்வு தொடங்கியது

சென்னை, மே 4– நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) […]

Loading

செய்திகள்

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கை

திருச்சி, மே 2 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:– தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் […]

Loading

செய்திகள்

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு :

4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பலன் சென்னை, ஏப்.25-– அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், உயர்கல்விக்கான வாய்ப்பு களை ஏற்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக […]

Loading

செய்திகள்

2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

நியூயார்க், ஏப். 20– இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5.83 கோடி கல்வி உதவித்தொகை:

மத்திய அரசு வழங்கியது சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ரூ.5.83 கோடி வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 600 வரையிலும், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.10,100 முதல் […]

Loading

செய்திகள்

வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் தொழில்நுட்பங்களை கற்க வேண்டும்: கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா அறிவுரை

கடலூர், ஏப்.17– வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் கடின உழைப்புடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.— கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேராசிரியர்கள் எழுதிய புத்தகத்தினை வெளியிட்டு கல்லூரி அளவில் பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா புத்தகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:– கல்லூரி கல்வியானது […]

Loading

செய்திகள்

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.16- வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார். வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் […]

Loading