செய்திகள்

மாசி மக விழா : கும்பகோணத்தில் 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம், பிப்.18- கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோவில்களில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அனைத்து சுவாமி- அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், […]