வாழ்வியல்

இந்தியக் கடலின் அடியில் இரும்பு, மாங்கனிஸ் தாதுக்கள் அதிக அளவுக்கு இருப்பது கண்டுபிடிப்பு

இந்தியக் கடலின் அடியில் இரும்பு, மாங்கனிஸ் தாதுக்கள் அதிக அளவுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1959-61இல் இந்தியக் கடலில் சோவியத்து விஞ்ஞானிகள் இரு பயணங்களை மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் பயணங்களில் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு :– இந்தியக் கடலுக்கு அடியிலுள்ள நிலவுலக முடியின் தடிமன், அமைப்பு, தணிவு ஆகியவை முதன் முதலாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அதன் தணிவை ஆராய்ந்த பொழுது, இதுவரை அறியப்படாத மலைகளும் […]