தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி நெல்லை, டிச. 13– திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., […]