சிறுகதை

மழைப் பயணம் – ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்களாக கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது மழை. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு. குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலைகள் எல்லாம் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் எல்லாம் சமமாக தெரிந்தது. எது மேடு, எது பள்ளம் என்று அறியாமல் வாகனங்களில் செல்பவர்கள் முட்டி மோதி கீழே விழுந்து சென்றுகொண்டிருந்தார்கள். ராகவன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார். ஓரளவுக்கு நின்றிருந்தது மழை. இப்படியே அலுவலகத்திற்கு சென்று விட்டால் சாயங்காலம் எப்படியாவது திரும்பி வந்து விடலாம் என்பது அவரது கணக்கு. […]