வாழ்வியல்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்த முயற்சியின் பலனாக ஆப்பிரிக்காவின் மலாவிவில் உலகின் முதல் மலேரியா தடுப்புமருந்து கண்டுபிடித்து வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 4,35,000 உயிர்கள் மலேரியாவுக்கு பலியாகிறது. இந்தக் கொடிய மலேரியா நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்த கன்டுபிடிப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று கண்டுபிடிப்பாளர்கள் கூறுகிறார்கள்.