சிறுகதை

இறுதி வாதம் – சாந்திகுமார்

அன்று நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாத அளவுக்கு மக்கள் கூடியிருந்தனர். பத்திரிகை நிருபர்கள், ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு புறம். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மருத்துவர் பூவரசனின் குழாமைச் சேர்ந்தவர்கள் மறுபுறம், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என்று பல தரப்பினரும் கூடியிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் பூவரசனின் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையின் சரியான சிகிச்சை, சரியான நேரத்தில் கிடைக்காததால் தான் மரணம் […]

செய்திகள்

கொரோனாவால் கர்ப்பிணி மருத்துவர் பலி

திருவண்ணாமலை, மே 24– போளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி டாக்டர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வசந்தம் நகரில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மனைவி மணியம்மாள். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற அரசு டாக்டர்கள் ஆவர். இவர்களது மகள் கார்த்திகா (வயது 29). டாக்டரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு […]

செய்திகள்

மதுரையில் கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி :முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை,மே.9- 8 மாத கர்ப்பிணியான டாக்டர் சண்முகப்பிரியா கொரோனாவுக்கு பலியான சம்பவம் மருத்துவ துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தவர் டாக்டர் சண்முகப்பிரியா (வயது 32). 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம் போல நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில […]

செய்திகள்

கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனையான ரெம்டெசிவிர்’ மருந்து : மருத்துவர், ஊழியர் கைது

சென்னை, மே.5- சென்னையில் கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்த கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனை டாக்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருந்து ஊழியரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் நுரையீரல் 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக ‘ரெம்டெசிவிர்’ பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1,568-க்கு விற்கப்படும் இந்த மருந்தை இரவு-பகலாக காத்திருந்து மக்கள் வாங்கி செல்லும் […]