விழுப்புரம், ஜன.21-– மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரத்தில் வனத்துறை சார்பில் மாநில அளவிலான வன அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது அவர், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற திட்டங்கள் குறித்தும், ஆரம்பிக்கப்பட வேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தார். இதில் அனைத்து மாவட்ட வன […]