சென்னை, செப் 11 “கீர்வான வாணி பாரதி: மகாகவியின் மார்க்கம்” என்னும் தலைப்பில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி சுவாதி ஆத்மநாதனின் பிரத்தியேக நாட்டிய நிகழ்ச்சி (முதல் முறையாக சோலோ- தனி நடனம் ) மயிலை ஆர் ஆர் சபாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மகாகவியின் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதியின் தெவிட்டா இசையில் நடந்த 90 நிமிடம் “ பாட்டு- பரதம்” நிகழ்ச்சியில், அரங்கில் அமர்ந்திருந்த கலை ஆர்வலர்கள் மௌனத்தில் மலைத்து மெய்சிலிர்த்தனர் என்றால் அது மிகையல்ல.“எதிர்காலத்தில் […]