போபால், செப். 7– மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மற்றொரு நகரமான ஜபல்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் ‘இந்தூர்-ஜபல்பூர்’ விரைவு ரயிலின் 2 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டன. ஜபல்பூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது இந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். எனினும் அந்த வழித்தடத்தில் ரெயில்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. […]