புதுடெல்லி, அக் 25 விண்வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விண்வெளித்துறையில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி தொகுப்பு நிதி கொண்ட மூலதன நிதியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- […]