செய்திகள்

நாகர்கோவிலில் அமித்ஷா 7ந்தேதி தேர்தல் பிரச்சாரம்

நாகர்கோவில், மார்ச்.4- மத்திய அமைச்சர் அமித்ஷா 7-ந் தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தற்போது தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக வருகிற 7ந்தேதி ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்குகிறார். அங்கு அவருக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காரில் சுசீந்திரம் […]

செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

புதுடெல்லி, பிப்.2– டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி திட்டத்தின்படி 60 வயதை கடந்தவர்களுக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை தாண்டியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. டெல்லியில், பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். அதேபோல சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கோவேக்சின் தடுப்பூசி […]

செய்திகள்

தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை

தலைமை கழகத்தில் தேர்தல் பணிகள் குறித்து எடப்பாடி – ஓ.பி.எஸ். ஆலோசனை தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது சென்னை, மார்.1–- அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஏப்ரல் 6–-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி […]

செய்திகள்

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை

சென்னை, மார்.1–- அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஏப்ரல் 6–-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பாரதீய ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் […]

செய்திகள்

வாரிசுகளை பதவியில் அமர்த்துவதில் தான் சோனியா, ஸ்டாலினுக்கு அக்கறை

மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை வாரிசுகளை பதவியில் அமர்த்துவதில் தான் சோனியா, ஸ்டாலினுக்கு அக்கறை விழுப்புரம் பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா கடும் தாக்கு தமிழகத்தை முன்னேற்றி செல்லும் ஆட்சிக்கு வாக்களியுங்கள் விழுப்புரம், மார்ச்.1- மக்களைப் பற்றி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கவலைப்படுவதில்லை. சோனியா காந்திக்கு ராகுலை பிரதமராக்குவதிலும், மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்குவதிலும்தான் அக்கறை இருப்பதாக விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6–ம் தேதி ஒரே கட்டமாகச் […]