செய்திகள்

பான் – ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் 31–ந்தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, செப். 18– பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் இதை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்–-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை […]

செய்திகள்

கொரோனா பரவும் அபாயம்: 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி, செப்.17- பண்டிகை காலம் என்பதால், இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- நாடு முழுவதும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. கேரளாவில் கூட குறைந்து விட்டது. ஆனால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால், கொரோனா […]

செய்திகள்

வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப்.14- வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:- தமிழகத்தில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் அமைக்க தேவையான தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மெகா தடுப்பூசி […]

செய்திகள்

கூடுதலாக 1 கோடி தடுப்பூசி: மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப்.7– தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணைத் தொகை 15 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12–ந்தேதி ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் […]

செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி, ஆக.29– மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி (டியர்னஸ் அலவன்ஸ்) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு முன் 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அது 28 சதவீதமாக […]

செய்திகள்

பெகாசஸ் விவகாரத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, ஆக. 16– பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300க்கு மேற்பட்டோரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]

செய்திகள்

வெளிநாட்டினருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி, அக.10– இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் ‘கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்–வி’ ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு ‘கோவின்’ என்ற இணையதளம் துவங்கியுள்ளது. இதில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தலாம். அதற்கான சான்றிதழையும் அந்த இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரும், இந்த இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய […]

செய்திகள்

ரெயில்களில் ‘வை–பை’ வசதி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஆக.5- செலவு அதிகம் என்பதால் ரெயில்களில் வை–பை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு வை–பை வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்த அப்போதைய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த 4 அல்லது 4½ ஆண்டுகளில் ரெயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி முதற்கட்டமாக ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த வசதி […]

செய்திகள்

சைபர் கிரைம் புகார்களை அளிக்க மத்திய அரசின் புதிய இணையதளம்

சென்னை, ஜுலை 22– சைபர்கிரைம் தொடர்பாக நடக்கும் குற்றங்கள் குறித்து நாட்டின் எந்த மூலையில் இருந்தும் புகார் அளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சைபர் பிரிவு புதிய இணையதள முகவரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இணையதளம் வழியாக நடக்கும் குற்றங்கள் பெருத்து போய் விட்டன. குறிப்பாக ஏடிஎம் மிஷினில் நுாதன முறையில் கைவரிசை காட்டி கோடிகளை அள்ளிய ஹரியானா கும்பலை சென்னை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் தி.நகர் காவல்துறை மேவாட்டில் வைத்து வளைத்துப் பிடித்தனர். […]

செய்திகள்

மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு: நடப்பாண்டிலேயே அமல்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 19– தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் நிலைபாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, திமுக சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]