செய்திகள்

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

சென்னை, ஜூலை.9- தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சி விதிகளின்படி, ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். அதன்படி கட்சிப் பதவியில் இருப்பவர்கள் அரசு பதவிகளில் அங்கம் வகிக்க முடியாது. நேற்று முன்தினம் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு மீன்வளம், கால்நடை, […]

செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது

புதுடெல்லி, ஜூன் 2– மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக தனி நபர் அல்லது அமைப்புகள் செய்த பணிகளை பாராட்டி உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குனரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் […]

செய்திகள்

மத்திய அமைச்சரின் மகள் கொரோனா தொற்றுக்கு பலி

இந்தூர், மே 4– மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகள் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் கெலாட். அவருடைய மகள் யோகிதா சோலங்கிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முதலில் உஜ்ஜைனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நலம் மோசமடைந்ததால், இந்தூரில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 80 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில், […]

செய்திகள்

5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்த மகாராஷ்டிரா: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஏப்.9-– சரியான திட்டமிடுதல் இல்லாததால் மகாராஷ்டிர அரசு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வீணடித்து விட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவர். எனவே அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-–மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அத்துடன் தடுப்பூசி போடும் […]