செய்திகள்

மதுரையில் 2–ந்தேதி மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்க கால்கோள் விழா

மதுரை, மார்ச் 27– மதுரையில் பிரதமர் மோடி 2–ந்தேதி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கான கால்கோள் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பாரதீய ஜனதா நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏப்ரல் 2–ந்தேதி மதுரை பாண்டிக்கோவில் சுற்றுவழிச்சாலையில் உள்ள அம்மா […]

செய்திகள்

சிறுநீரக நோய் பரவலை கண்டறிந்து சிகிச்சையளிக்க வீடு வீடாக சர்வே

மதுரை, மார்ச்.11– சிறுநீரக நோய் பரவலை கண்டறிந்து சிகிச்சையளிக்க வீடு வீடாக சர்வே நடத்திட மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மீனாட்சி மிஷன் மருத்துவ மனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர்.கே.சம்பத்குமார், சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர்.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர்.ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் ஆகியோர் இணைந்து மார்ச் 11 அன்று அனுசரிக்கப்படுகின்ற உலக சிறுநீரக தினம் 2021 நிகழ்வையொட்டி மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் செய்தியாளர் […]

செய்திகள்

மதுரையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

மதுரை, மார்ச்.10– மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி :– மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மகாராஷ்டிரம், கேரளம் பேன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று இண்டாம் அலை பரவி வருகிறத. எனவே தமிழ்கத்தில் இ.பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள […]

செய்திகள்

துப்பாக்கிச் சுடும் போட்டியில் 8 பதக்கங்கள்: பாதுகாப்புக் காவலரின் பேரன் தர்ஷன் சாதனை

மதுரை, மார்ச்.9– தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு காவலரின் பேரன் 8 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஒரு செக்யூரிட்டி கார்டாகப் பணிபுரியும் மனோகரனின் பேரன் தர்ஷன் கடந்த 2 ந் தேதி முதல் 7 ந் தேதி வரை சென்னையில் நடைபெற்ற 46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் […]

செய்திகள்

ஒழுங்கு நடவடிக்கையால் மக்களைக் கவர்ந்த மாட்டுத்தாவணி போக்குவரத்துக் காவலர் பழனியாண்டி

மதுரை, மார்.1– மதுரையில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் அவரது சிறந்த ஒழுங்கு நடவடிக்கையால் பொதுமக்களைக் கவர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி டிராபிக் சிக்னலில் பணிபுரிபவர் திருப்புவனத்தைச் சேர்ந்த பழனியாண்டி. இவர் தன்னுடைய நல்ல அணுகுமுறை மூலம் சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்போது பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவில் 28 வருடங்களாகப் பணியாற்றும் பழனியாண்டி, கடந்த ஒரு வருடமாகத்தான் போக்குவரத்துக் காவல் பிரிவில் பணிபுரிகிறார். இவர் இந்த ஒரு வருடத்திலேயே அண்ணாநகர், மாட்டுத்தாவணி பகுதி சிக்னல்களில் பணியாற்றி […]

செய்திகள்

தூத்துக்குடி–குஜராத் ஓகா கோட்டைக்கு மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரை, மார்ச். 1– தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக குஜராத் ஓகா கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. மதுரை கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக குஜராத் மாநிலம் ஓகா கோட்டைக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த ரெயில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஓகா மற்றும் தூத்துக்குடி இடையேயான ரெயில் சேவை சிறப்பு ரெயிலாக இயக்கப்படவுள்ளது. அதன்படி இந்த ரெயில (வ.எண்.09568) ஓகாவிலிருந்து வருகிற ஏப்ரல் மாதம் […]

செய்திகள்

வாழைநாரில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் மதுரை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு

சோழவந்தான், மார்ச். 1– வாழைநாரில் பல்வேறு கைவினைப் பொருட்களை் தயாரிக்கும் மதுரையைச் சேர்ந்த் விவசாயி முருகேசனை பிரதமர் மோடி பாராட்டினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன். இவருக்கு வாழையில் வீணாகும் நார்களை வைத்து ஏதாவது பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று எண்ணம் உதித்தது. இதனால் தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து வாழை நாரை வித விதமாகப் பிரித்து எடுக்கும் எந்திரத்தை வாங்கி அதன் […]