துரைமுருகன் குற்றச்சாட்டு சென்னை, டிச.1-– மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் வதந்தி பரப்புவது விஷமத்தனமானது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–- மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 3.10.2023 நாளன்று, ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன். மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள […]