சென்னை, ஏப். 30– செங்கல்பட்டு அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய மதபோதகர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அடுத்த பொன்மார் ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (வயது 35). இவர் பொன்மாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக உள்ளார். 2020-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்பவரை விமல் ராஜ் திருமணம் செய்தார்.இ ருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. […]