செய்திகள்

57 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 20– தமிழ்நாட்டில் 57 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் பாரதி நகர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் 68 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸ் 25 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,693 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை, செப்.17- தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 936 ஆண்கள், 757 பெண்கள் என மொத்தம் 1,693 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் […]

செய்திகள்

வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப்.14- வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:- தமிழகத்தில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் அமைக்க தேவையான தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மெகா தடுப்பூசி […]