செய்திகள் விழாக்கள்

இந்தோ–ரஷ்ய பண்பாட்டு நட்பை கொண்டாடும் ரஷ்ய நடன விழா 2026

சென்னை, ஜன. 22: ரஷ்ய நடன விழா 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 9, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நடனத்தின் உலகளாவிய மொழி மூலம் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையிலான நீடித்த பண்பாட்டு நட்பை உற்சாகமாகக் கொண்டாடும் இந்த விழா, மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துவதிலும் கலைப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத்தின் பண்பாட்டு […]

Loading

செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்: எடப்பாடி

சென்னை, ஜன. 21: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தீயசக்தி தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜன. 21: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார். மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்தை நடத்தவில்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஜன. 21: அ.தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. எங்களை யாரும் அணுகவோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்குள் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் […]

Loading

செய்திகள்

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கினர்

சென்னை, ஜன. 21: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘100 சதவீத உழைப்பைக் கொடுத்து தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 21: 100 சதவீத உழைப்பை கொடுத்து தேர்தல் களப்பணியாற்றுங்கள் என்று தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, […]

Loading

செய்திகள்

பிறவிலேயே காது கேட்காத 300 குழந்தைகளுக்கு ஸ்ரீ ராமச்சந்திரா வெற்றிகரமான ஆபரேஷன்

சென்னை, ஜன. 21– பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல் பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை தனது 3வது வயதில் மேற்கொண்ட கல்யாணி கார்த்திக் தற்போது முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கிறார். அவர் பரத […]

Loading

செய்திகள்

ஹானா ஜோசப் மருத்துவமனை ரூ.42 கோடிக்கு பங்குகள் வெளியீடு

மும்பை, ஜன. 21: மதுரையைச் சேர்ந்த ஹானா ஜோசப் மருத்துவமனை, தன் விரிவாக்க திட்டங்களுக்காக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடுகிறது. மொத்தம் 60 லட்சம் பங்குகளை வெளியிட்டு ரூ.42 கோடி நிதி திரட்ட உள்ளது. இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 முக மதிப்பு கொண்டது. ரூ.67 முதல் ரூ.70 வரை ஒரு பங்குக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்கிறது. இந்த மருத்துவமனை நரம்பு மண்டல சிகிச்சை இருதய ஆபரேஷன் மற்றும் விபத்து சிகிச்சையில் அதிநவீன வசதிகள் […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் டிடிவி தினகரன்

சென்னை, ஜன. 21– அண்ணா தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தது. பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டிடிவி தினகரன் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்தார். தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க […]

Loading

செய்திகள்

புலிகள் பாதுகாப்பில் வனத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பாராட்டு

சென்னை, ஜன. 21: சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஆளுமைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 5 புலிகள் காப்பகங்களான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ஆகியவையின் ஆளுமைக்குழுவின் கூட்டம் இது. இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் […]

Loading