செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சராக பட்னாவிஸ் பதவி ஏற்றார்

ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் துணை முதலமைச்சர் ஆனார்கள் மும்பை, டிச.6- பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த பிரமாண்ட விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் பதவி ஏற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 40 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை, நவ. 26– மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க., சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: 45 வேட்பாளர்களை அறிவித்த சிவசேனா

மும்பை, அக். 23– மகாராஷ்டிராவில் 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை சிவசேனா வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி–பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார். 288 சட்டமன்ற தொகுதிகளை மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணியில், பா.ஜ.க.–சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிராவில் கூகுள் உதவியால் குடும்பத்தோடு இணைந்த 2 முதியோர்

மும்பை, செப். 18– மகாராஷ்டிராவில் காணாமல் போன 2 முதியவர்கள் கூகுளின் உதவியோடு அவர்களின் குடும்பங்களுடன் வெற்றிகரமாக இணைந்தனர். குஜராத்தின் வதோதராவில் மனநலம் பாதிக்கப்பட்ட 70 வயதான மாவ்ஜிபாய் வாக்ரி காணாமல் போனார். பால்கர் மாவட்டத்தில் சுற்றித் திரிந்த அவரை, செப்டம்பர் 14 ந்தேதி ஜீவன் ஆனந்த் சன்ஸ்தா தொண்டு நிறுவனத்தினர் தங்களது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் பேசி சில தகவல்களை பெற்றதுடன், சொன்ன தகவல்களை வைத்து கூகுளில் தேடியுள்ளனர். கூகுளின் உதவியோடு வாக்ரி […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிராவில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

மும்பை, ஜூலை 29– நவி மும்பையில் உள்ள நகைக்கடையில் 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஹெல்மட் அணிந்தபடி 3 பேர்கொண்ட கும்பல் நுழைந்தது. அதிலிருந்து ஒருவர் உடனடியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேலே சுட்டு ஊழியர்களை மிரட்டினார். அப்போது கடையில் இருந்த அலாரத்தை இயக்க முயன்ற ஊழியரை அந்த கும்பல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஜவுளி ஏற்றுமதியில் சாதிக்கும் தமிழகம்

ஆர். முத்துக்குமார் தமிழ்நாட்டின் ஜவுளி தொழில்துறை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான ஜவுளி உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். பருத்தி, பட்டு, செயற்கை நார் போன்ற பல்வேறு வகையான ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்குகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 20.78 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய செய்தி. 2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி 34.43 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, அதில் தமிழ்நாடு 7.15 பில்லியன் […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலம் புஷி அணையில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மும்பை, ஜூலை 1– மகாராஷ்டிரா மாநிலம் புஷி அணையில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள புஷி அணைக்கு புனேவின் ஹதப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கானின் குடும்பத்தினர் 18 பேர் வந்துள்ளனர். அணையின் பின்புறம் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அதில் 10 […]

Loading