செய்திகள்

தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை

பல்லாவரம், நவ. 6– தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 மாணவர்களை கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை முதல், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட […]

Loading

செய்திகள்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோத்தகிரி, அக். 24– கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாசில்தாராக கோமதி என்பவர் உள்ளார்.இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் அனுபோக சான்றிதழ், அடங்கல் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வழங்குவதற்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அலுவலகம் நேரம் முடிந்த பிறகு இங்கு வந்து சான்றிதழ்களை […]

Loading

செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

விருதுநகர், அக். 15– விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் உயிர்தப்பினர். திருப்பூர் அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் தனது உறவினர் மகன் மனோஜ் என்பவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துவிட்டு உறவினருடன் திருப்பூருக்கு நேற்று மாலை தனது காரில் புறப்பட்டார். தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை, செப். 23 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான […]

Loading

செய்திகள்

திண்பண்டம் வாங்கித் தருவதாக கூறி நண்பருடைய 2 ஆண் குழந்தைகளை அழைத்துச் சென்று கொலை

கொன்ற கொடூரன் கைது திருப்பத்தூர், செப். 20– திருப்பத்தூர் மாவட்டத்தில் சடலமாக 2 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்று கொன்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (வயது 4) மற்றும் யோகித் (வயது 6) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். மேலும், யுவராஜின் நண்பரான வசந்தகுமார், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று திண்பண்டங்கள் […]

Loading