செய்திகள்

விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

விழுப்புரம், ஜூலை9- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அனல்பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தல் போட்டியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் […]

Loading

செய்திகள்

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் பிணம்: கொலையா? போலீசார் விசாரணை

கோவை, ஜூலை 8– கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் வேலைக்கு […]

Loading

செய்திகள்

ஹாத்ரஸ் சம்பவம்: போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் சோதனை

மணிப்பூரி, ஜூலை 4– உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரியில் அமைந்துள்ள போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் இன்று சோதனை செய்துள்ளனர். போலே பாபாவை தேடி வரும் போலீசார், அவரது ஆசிரமத்தில் மறைந்திருக்கிறாரா அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் சோதனையை நடத்தி வருகிறார்கள். ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், ‘போலே பாபா’ என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 2–ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். […]

Loading

செய்திகள்

கடிதம் எழுதி வைத்து திருடிச் சென்ற திருடனுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி, ஜூலை 3– கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிச் சென்ற திருடனை, மெய்ஞானபுரம் போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் சாத்தான்குளம் ரோட்டை சேர்ந்தவர் சித்திரை செல்வின். இவரும் இவரது மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். சென்னையில் ஒரு வங்கியில் மகன் பணியாற்றி வருகிறார். மருமகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையை பார்ப்பதற்காக […]

Loading

செய்திகள்

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற பெண் போலீசாருக்கு பதக்கம்

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார் சென்னை, ஜூன் 18–- அகில இந்திய அளவிலான பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற பெண் போலீசாருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார். தமிழ்நாடு போலீஸ்துறையில் மகளிர் போலீசாரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அகில இந்திய அளவிலான பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 15-ந் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை போலீசார் விசாரணை

சென்னை, மே 23– பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் எண்ணை […]

Loading