செய்திகள்

போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய 5 பேர் கும்பல் கைது

சென்னை, ஜூலை 3– சென்னையில் போலி நகைகளைக் கொடுத்து ஏமாற்றிய வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த சில வட மாநிலத்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களது உடமைகள் அனைத்தையும் சோதனை செய்து பார்த்தபோது, அரை கிலோ தங்க நகை, பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது தெரிய வந்தது. […]