புதுடெல்லி, ஆக. 27– விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்தின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் […]