சென்னை, ஜூன் 3– சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் 12 காவல் மாவட்ட தனிப்படையினருடன் ஒருங்கிணைந்து 110 போதை பொருள் விசாரணை வழக்குகளில் 228 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பெருநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் ஜி.தர்மராஜன், கண்காணிப்பில் 5.8.2024 அன்று முதல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஏஎன்ஐயூ பிரிவு நுண்ணறிவுப்பிரிவு […]