நாடும் நடப்பும்

பொறியியல் கலந்தாய்வு பெருவிழா

ஆர். முத்துக்குமார் உலகமே வியந்து பார்க்கும் ஒரு நிகழ்வு தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை முறையாகும். அதன் முதல் கட்டமாக மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26–-ம் தேதி தொடங்கிய பதிவு தற்போது நிறைவு பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 12–-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி […]

செய்திகள்

2ம் ஆண்டு பொறியியல் படிப்பில் நேரடியாக சேர 10–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக.6- தகுதிவாய்ந்த டிப்ளமோ படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடியாக 2-வது ஆண்டு பொறியியல் படிப்புகளில் 2021–22-ம் கல்வியாண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 10ந்தேதி முதல் 30ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். 04565–230801, 224528 என்ற தொலைபேசி எண்களிலும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த கல்வியாண்டுக்கான பி.இ., […]

செய்திகள்

பொறியியல் படிப்பில் சேர 24ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக.4- பொறியியல் கல்லூரிகளில் சேர 24ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பொறியியல் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு மாணவ–மாணவிகள் முதலில் விண்ணப்பப்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் நடப்பாண்டில் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூலை) 26ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் […]

செய்திகள்

பொறியியல், கலைக்கல்லூரிகளில் சேர 26ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

சென்னை, ஜூலை.20- பொறியியல், கலைக்கல்லூரிகளில் சேர 26ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற ‘கெஸ்ட் லெக்சரர்ஸ்’ என்ற கவுரவ விரிவுரையாளர்கள், தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டு இருப்பதற்கு நன்றி சொல்வதற்காக என்னை சந்தித்தனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்ததை நிறுத்தி, அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள […]

செய்திகள்

அக்டோபர் 25 முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் : ஏ.ஐ.சி.டி.இ.

சென்னை, ஜூலை.15- பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் அக்டோபர் 25-ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டில் பிளஸ்–2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்கான பணிகளில் அனைத்து கல்வி வாரியங்களும் தீவிரமாக […]

செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு தொடக்கம்

சிதம்பரம், ஜூலை 4– சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் சார்பில், என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் நிகழாண்டில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டயப் படிப்புக்கான கட்டடங்கள், ஆய்வுக் கூடங்கள், உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. சுரங்கவியல் பட்டயப் படிப்பை நிகழ் கல்வியாண்டில் தொடங்குவதற்கான அங்கீகாரத்தை புதுதில்லி ஏஐசிடி அளித்தது. இந்தப் படிப்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 60 மாணவர்கள் […]

செய்திகள்

‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வு குறித்து விரைவில் முடிவு

புதுடெல்லி, ஜூன்.19- தள்ளி வைக்கப்பட்டு உள்ள ‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. 4 முறை நடத்தப்படுகிறது. இதில் முதல் 2 தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த அடுத்த 2 தேர்வுகள் நடத்தவில்லை. இதைப்போல இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வும் நடத்தப்படவில்லை. […]