சென்னை, ஆக. 17– 7.5% அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் பொறியியல் மாணவர்களின் கல்வி கட்டணங்களை அரசு ஏற்கும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்கக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணாக்கர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவீனங்களான, படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் அல்லது போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட […]