சென்னை, அக்.22-– தனிநபர் வருமானத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அபரிமிதமாக உள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022–-23-ம் ஆண்டு 8.88 சதவீதம் என இருந்த நிலையில் 2023-–24-ம் ஆண்டில் 9.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தமட்டில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் […]