செய்திகள்

பொன்னேரிக்கரை சாலை ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆய்வு

காஞ்சீபுரம், செப்.16-– பொன்னேரிக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் அருகில் சென்னை –பொன்னேரிக்கரை –காஞ்சீபுரம் சாலையில் ரூ.50.78 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலப்பணிக்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயார் செய்யப்பட்டு 8.5.2017 அன்று தமிழக முதல்வரால் பாலப் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. ரெயில்வே மேம்பாலத்தின் நீளம் 927.33 […]