செய்திகள்

கைக்குழந்தைகளுக்கான பைசர் தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

நியூயார்க், ஜூன் 10– அமெரிக்காவின்ஃபைசர் நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது. ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கப்படுவதைப் போலவே, இந்த வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஃபைசர் நிறுவனம் […]

செய்திகள்

இந்தியாவில் குழந்தைகளுக்கான பைசர் தடுப்பூசி

டெல்லி, ஜூன் 5– இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து தற்பொழுது பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் […]

செய்திகள்

12–15 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி: அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், மே.11– அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்குப் பயன்படுத்த, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து கழகம் (எப்.டி.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்க ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில், உலகிலேயே அதிகளவு பாதிப்புக்கு உள்ளான அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாடு, அவசர […]