வேலூர், செப். 6– பிறந்த 8 நாட்களே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). இவரது மனைவி டயானா (20). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி மாலை ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில் […]