தன்னை எப்போதும் நாகரிகப் பெண்ணாகக் காட்டிக்கொள்ளும் ரீனாவிற்கு அழகு கொஞ்சம் அதிகம் இருந்தாலும் திமிர் ரொம்ப அதிகமாக இருந்தது. கல்லூரியில் இருக்கும் எல்லா பெண்களை விடவும் ரீனாவின் உடை வித்தியாசமாக இருக்கும். அவள் உடுத்தும் உடை பார்ப்பவர்களுக்கு அநாகரீகமாகத் தெரிந்தாலும் தான் ஒருத்தி மட்டும் தான் இந்த ஜெனரேஷனுக்கு ஒத்துப்போகும் பெண் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வாள். அவளைச் சுற்றி எப்போதும் ஆண் நண்பர்கள் தான் குழுமி இருப்பார்கள். கேட்டால் நீங்கள் எல்லாம் இந்தக் காலத்து […]