முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஆக.23–- பட்டுக்கோட்டையில் விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ் குடும்பத்துக்கு ரூ,25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– தஞ்சை மாவட்ட ஆயுதப்படை பெண் போலீசாக பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் சுபபிரியா கடந்த 21-–ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 8.30 மணியளவில் பட்டுக்கோட்டை உட்கோட்டம் பேராவூரணி இரட்டைவயல் கிராமம் கண்ணமுடையார் […]