செய்திகள்

பெஞ்ஜல்’ புயல்: சேத மதிப்பீடு குழு அறிக்கையை உடனே வழங்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவு

சென்னை, ஜன.28- ‘பெஞ்ஜல்’ புயலுக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்பு பணிக்கான சேத மதிப்பீடு குழுவுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆலோசனை செய்து அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்டார். ‘பெஞ்ஜல்’ புயலின் காரணமாக சேதம் அடைந்த கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுனர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழுவை வருவாய் மற்றும் பேரிடர் […]

Loading

செய்திகள்

மத்திய குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, டிச.7- தமிழ்நாட்டில் ‘பெஞ்ஜல்’ புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு நேற்று சென்னை வந்தது. அந்தக்குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தில் ‘பெஞ்ஜல்’ புயல் காரணமாக அதிக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ந் தேதி ஒரு […]

Loading

செய்திகள்

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை: ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு

* கார்கள் அடித்து செல்லப்பட்டன * வீடுகளுக்குள் வெள்ளம் கிருஷ்ணகிரி, டிச.2– கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடிய, விடிய பெய்த கனமழையால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளதால் வெள்ளக்காடானது. ஊத்தங்கரையில் 16 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்ஜல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே […]

Loading